சட்டம் இயற்றியும் பலனில்லை

பெண்கள் வருத்தம்

இங்கிலாந்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் ஆலிஸ் ரக்கில்ஸ் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவரை நீண்ட நாள்களாக பின்தொடர்ந்த நபர், திட்டமிட்டு இந்தக் கொலையை அரங்கேற்றியது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, பின்தொடர்வதில் இருந்து பெண்களை காக்கும் வகையில், கடந்த ஆண்டு ஜனவரியில் சட்டம் இயற்றப்பட்டது. ஸ்டாக்கிங் ப்ரொடக்ஷன் ஆர்டர் (பின்தொடர்வதில் இருந்து பாதுகாப்பு அளித்தல்) என்ற பெயரில் இயற்றப்பட்ட இந்த சட்டம், இங்கிலாந்தில் வெகு சில காவல் நிலையங்களில் மட்டுமே திறம்பட செயல்படுத்தப்படுவதாகவும், பெரும்பாலான காவல் நிலையங்களில் ஏட்டளவில் மட்டுமே இந்த சட்டம் நீடிப்பதாகவும் பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவிட் பொதுமுடக்க காலத்தில், பெண்களுக்கு எதிரான பின்தொடரும் குற்றம் அதிகரித்த போதிலும், சில காவல் அதிகாரிகள் ஒரு உத்தரவை கூட இந்த சட்டத்தின்கீழ் பிறப்பிக்கவில்லை என்று பெண்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

four − one =