உக்ரைனில் ஆபத்தான நிலையில் அணுமின் நிலையம்

உக்ரைனில் ஆபத்தான நிலையில் அணுமின் நிலையம்

ஐ.நா. எச்சரிக்கை

உக்ரைன், ரஷ்யா போர் ஏறத்தாழ ஐந்து மாதங்களை கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. உக்ரைன் சபோஷிர் நகரில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனால் அந்த அணுமின் நிலைய செயல்பாடு முடங்கியது.
தற்போது அந்த அணுமின் நிலையம் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அங்கு ஆய்வு செய்து பராமரிப்பு பணியை மேற்கொள்ளவில்லை என்றால், பேராபத்து ஏற்படும் என்றும் ஐநா அணுமின் முகமை தலைவர் ரஃபேல் கிராஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அணுமின் நிலையத்தை சுற்றி வசிக்கும் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.