இங்கிலாந்தின் கேண்ட் நகரின் ராம்ஸ்கேட் பகுதியை சேர்ந்தவர் லீன் பியர்மேன். இவருக்கு வயது 66. இவர் தனிமையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டு வாடகையை 433 பவுண்டில் இருந்து 700 பவுண்டாக வீட்டின் உரிமையாளர் உயர்த்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லீன் பியர்மேன், வீட்டை காலி செய்ய முடிவு செய்தார். பின்னர் அவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. அதாவது இன்னொரு வீடு பார்த்து குடியேற வேண்டுமானால் அதற்கு அட்வான்ஸ், மேலும் வாடகை என்று செலவிட வேண்டும்.
இதனால் ஒரு வாகனத்தை வாங்கி அதிலேயே குடி ஏறலாம் என லீன் பியர்மேன் சிந்தித்தார். அந்த வகையில் தனது சேமிப்பு பணம் முழுவதையும் கொண்டு சொகுசு வேன் ஒன்றை விலைக்கு வாங்கினார். அங்கேயே தனது வாழ்நாள்களை அவர் கழிக்க முடிவு செய்து இருப்பதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் வீட்டில் வசிக்கும் போது வாடகை தொல்லை, வீட்டு உரிமையாளர் கொல்லை என பல்வேறு தொல்லைகள் இருக்கும். ஆனால் வேனில் வசிப்பது மிகவும் எளிதாகவும், வசதியாகவும் இருப்பதாக கூறும் அவர், எந்த ஒரு தொல்லையும் இன்றி சுகபோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
GIPHY App Key not set. Please check settings