கேம்பிரிட்ஜ்ஷிர் மேயர் பதவியை கைப்பற்றியது தொழிலாளர் கட்சி

 

 

கேம்பிரிட்ஜ்ஷிர் மற்றும் பீட்டர்பரோ மேயர் தேர்தலில் 51.3% வாக்குகள் பெற்று தொழிலாளர் கட்சி வேட்பாளர் நிக் ஜான்சன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று நிலவரப்படி 50 சதவீதத்துக்கும் மேல் எந்த வேட்பாளரும் வாக்குகள் பெறவில்லை. இரண்டாம் சுற்று நிலவரப்படி, 51.3% வாக்குகள் பெற்ற நிக் ஜான்சன், நடப்பு மேயரான கன்சர்வேடிவ் கட்சியின் ஜேம்ஸ் பால்மரை வீழ்த்தினார்.

இந்த வெற்றி தனக்கு வியப்பை அளிப்பதாகக் கூறிய நிக் ஜான்சன், கேம்பிரிட்ஜ்ஷிரின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி டாக்டர் நிக் ஜான்சன் 1,13,994 வாக்குகளும், கன்சர்வேடிவ் கட்சியின் ஜேம்ஸ் பால்மர் 1,08,195 வாக்குகளும் பெற்றிருந்தனர். கேம்பிரிட்ஜ்ஷிர் மேயர் தேர்தலில் மொத்தம் 36.4% வாக்குகள் பதிவாகியிருந்தது.

Add your comment

Your email address will not be published.

one × four =