டர்ஹாம் கவுண்டி கவுன்சிலில் இழுபறி

 

 

டர்ஹாம் கவுண்டி கவுன்சில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது.

நூற்றாண்டு காலமாக இந்த கவுன்சிலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 126 கவுன்சிலர் பதவியிடங்களில், 53 இடங்களை கைப்பற்றியது. அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர்களும், சிறிய கட்சிகளும் இணைந்து 31 இடங்களில் வெற்றிவாகை சூடினர். கன்சர்வேடிவ் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்தன. லிபரெல் டெமோக்ரேட்ஸ் கட்சி 17 இடங்களில் தனது இருப்பை பதிவு செய்தது.

கவுன்சிலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காததால், அங்கு இழுபறி நீடிக்கிறது. அதேசமயம், சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சைகளின் ஆதரவுடன் தொழிலாளர் கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

7 − 1 =