பிரிட்டன் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்ட்ராமர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500 பவுண்ட் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று லட்சத்து 50,720 பவுண்டுகள் சம்பாத்தியம் செய்திருப்பதாகவும், இதிலிருந்து கிடைத்த ஆதாயத்தை வரியாக தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வருமான வரி கணக்கை வெளியிட்ட அடுத்த நாளே எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்ட்ராமர் தனது வரி விவரத்தை அறிவித்துள்ளார். டேவிட் கேமரூனுக்கு அடுத்தபடியாக வருமான வரி கணக்கு விவரத்தை வெளியிட்ட இரண்டாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார்.
வரி தாக்கல் விவரத்தை வெளியிட்ட பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர்

GIPHY App Key not set. Please check settings