in

ஜெர்மனுக்கு பிரிட்டன் மன்னர் சார்லஸ் பாராட்டு

King Charles praises Ukraine support on state visit to Germany

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனிக்கு தனது மனைவி கமிலா உடன் சென்றார். அங்கு ஜெர்மன், பிரிட்டன் பொதுமக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாடினார். இதில் ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மார்கல் பங்கேற்றார்.

உக்ரைன் விவகாரத்தில் உக்ரேனுக்கு ஜெர்மனி உதவி செய்து வருவதை நினைவுகூர்ந்த மன்னர் சார்லஸ், இதற்காக ஜெர்மனியை வெகுவாக பாராட்டினார். மேலும் உக்ரைனுக்கு உதவ பிரிட்டனும், ஜெர்மனியும் ஒருமனதுடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக பிரான்ஸ் நாட்டிற்கு மன்னர் சார்லஸ் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் பிரான்சில் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் தன்னெழுச்சியாக நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிரிட்டனில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பு

பிரிட்டனில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு