பிரிட்டன் மன்னர் சார்லஸ் மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு தன் மனைவி கமலாவுடன் சென்றார். அங்கு விவசாய பண்ணையை அவர் பார்வையிட்டார். அப்போது அவருக்கு சீஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சார்லஸ் ஒரு குழந்தையைப் போல அதைத் தயாரித்து மகிழ்ந்தார்.
சூழல் இயலிலும் பசுமை விவசாயத்திலும் ஆர்வம் கொண்ட சார்லஸ், ஒரு குழந்தை போல தன்னை பாவித்து கொண்டு இந்த சீஸ் தயாரிப்பில் ஈடுபட்டது அங்கு இருந்த அனைவரையும் பரவசத்தில் வாழ்த்தியது. அப்போது ஜெர்மனி அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மியர், பிராண்டெண்ட்பர்க் மாகாண முதலமைச்சர் டியட்மர் வோயிட்கே ஆகியோர் உடன் இருந்தனர். இது மட்டும் இன்றி கிரீடம் வடிவிலான ‘கேக்’கும் மலர் சார்லசுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
GIPHY App Key not set. Please check settings