அதிகாரிகளை விளாசிய கிம்- ஜாங்- உன்

வடகொரியாவில் உணவு பஞ்சம்

கோவிட் பரவலின் தொடக்கத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியா அதன் எல்லைகளை கடந்த ஆண்டு மூடியதால், அங்கு கோவிட் பரவவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், அங்கு இந்த ஆண்டில் தொற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து வரலாறு காணாத பஞ்சத்தை அந்த நாடு எதிர்கொள்கிறது. இதனால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளை கடுமையாக திட்டி தீர்த்ததாகவும், கடந்த 1990களில் தேசம் சந்தித்த அதே அளவு உணவுப் பற்றாக்குறையை சந்திக்க பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக வடகொரிய மக்களின் நிலையை எண்ணி கிம் ஜாங் உன்-இன் தேகம் மெலிந்ததால், பொதுமக்கள் கவலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

six + 2 =