கரோனாவுக்கு டாக்டர் பலி

‘தடுப்பூசி வீண் என கூறியவர்’

கென்யாவில் கரோனா நோய்த் தொற்றுக்கு டாக்டர் ஒருவரே பலியாகியுள்ளார். அவர் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பலனளிக்காது என ஆழமாக வாதிட்டவர் ஆவார்.
கென்யா கத்தோலிக்க டாக்டர்கள் சங்க தலைவர் ஸ்டீபன் கரஞ்சா. கரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்ட அவர், கரோனாவை எதிர்த்து போரிடுவதில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையும், ஆவி பிடிப்பதும் நல்ல பலனை அளிக்கும் என வாதிட்டு வந்தார். இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றுக்குள்ளான அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எனினும், அவரது கருத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், கென்யாவில் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பது நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமன்றி, சில கடுமையான ஒழுங்குமுறை ஆணையங்கள் மேற்கொண்ட ஆய்விலும் உறுதியானது என்று தெரிவித்திருந்தது.
மேலும், டாக்டர் ஸ்டீபனின் கருத்தை அவர் சார்ந்த கத்தோலிக்க திருச்சபை போதகர்களே நிராகரித்தனர். கென்யாவில் இதுவரை 1,60,000 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 2,707 பேர் உயிரிழந்தனர்.

Add your comment

Your email address will not be published.

2 × one =