தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் தொழிலாளர் கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர்

 

ஹார்டில்பூல் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தோல்விக்கு முழுமையாக பொறுப்பேற்பதாக அக்கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவானது முதல் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக இத்தொகுதியில் தொழிலாளர் கட்சி வெற்றிக் கொடி நாட்டி வந்தது. இந்த நிலையில், முதன்முறையாக தற்போது நடைபெற்ற தேர்தலில் 6,940 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியை பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியிடம் தொழிலாளர் கட்சி இழந்தது. இது தொழிலாளர் கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அக்கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மரிடம் கேட்டபோது அவர் கூறியது:
தேர்தல் முடிவால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். நாங்கள் ஒரு கட்சியாக மாற்றம் அடைந்தாலும், அதை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதில் தோல்வி அடைந்துவிட்டோம்.
பெரும்பாலான நேரங்களில், நாட்டு மக்களுடன் பேசுவதற்கு பதிலாக எங்களுக்குள்ளேயே பேசி நேரத்தை வீணடித்து விட்டோம். ஹார்டில்பூல் உள்ளிட்ட பகுதிகளில், உழைக்கும் மக்களின் ஆதரவை பெற தவறிவிட்டோம். கட்சியின் அமைப்பை சரிசெய்வதற்கு தேவையான விஷயங்களில் இனி கவனம் செலுத்துவேன் என்றார்.

Add your comment

Your email address will not be published.

nineteen − four =