நாமக்கல் மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் காந்தமலை என்ற குன்றின் மேல், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற தலம் என்பதால், மகனுார் என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் மோகனுார் என்று மருவியது.
பழனியைப் போலவே இத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால், தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு, கயிலாயத்தில் இருந்து பழனி நோக்கிப் புறப்பட்டார்.
அவரைப் பின்தொடர்ந்த பார்வதிதேவி, ‘முருகா நில்’ என்று அழைத்தார். தாயின் சொல் கேட்டு முருகன் நின்றார். தாயின் அறிவுரை சொல் கேட்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பார்வதி தேவி அழைத்தபோது முருகன் நின்ற இடம் தான் இத்தலம் என்று தல வரலாறு கூறுகின்றது.
இக்கோவில், 1914ல் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, 1934ல் மற்றும் 2001ல் கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் நன்கொடை என, மொத்தம், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கடந்த, 23ல், விநாயகர் வழிபாடு, கிராமசாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, புனித நீர் வழிபாடு, கணபதி வேள்வி, காவிரி ஆற்றுக்கு சென்று, 5,008 தீர்த்தக்குடம் ஊர்வலம் கோபுரங்கள் கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
.வெள்ளிகிழமைஅதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக வேள்வியும், காலை, 9:42 மணிக்கு, சிவாச்சாரியார்கள்புனிதநீர் அடங்கியகலசங்களை சிவச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயம் மேல் உள்ள விமானக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்ட்டு மஹா கும்பாபிஷேகம் காந்த மலை முருகனுக்கு அரோகரா காந்தமலை முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது பின் மூலவ தெய்வமான பாலசுப்ரமணிய சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கபட்டு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், அறங்காவல் குழுத்தலைவர் நல்லுசாமி, உறுப்பினர்கள் செல்வ சீராளன், மல்லிகா, சீனிவாசன், ரமேஷ்பாபு, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா.
விழாக்குழு துணைத்தலைவர் டாக்டர் குழந்தைவேல், நிர்வாகிகள் நவலடி, வக்கீல் கைலாசம், செல்லவேல், மோகனுார் டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணன், கூட்டுறவு வங்கி செயலாளர் முருகேசன் மற்றும் சுற்று வட்டாரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்