பாடலீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி மகா உற்சவம்
கடலூர் மாவட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்கந்த சஷ்டி மகா உற்சவத்தை முன்னிட்டு 13ஆம் தேதி முதல் இன்று 18ஆம் தேதி வரை 6 நாட்கள் இரண்டு வேலைகளும் சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்று லட்சார்ச்சனை என்று சொல்லக்கூடிய ஒரு அர்ச்சனையானது நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து இன்று ஆறாவது நாளாக காலையில் கலசங்கள் வைத்து பூஜை செய்து சத்துரு சம்ஹார திரிசதி பூஜை ஹோமங்கள் நடைபெற்று பின்னர் புனித கலசங்கள் ஆலயத்தில் உள்வாளாகத்தில் மேளதாள முழக்கத்துடன் புறப்பாடு ஆகி பின்னர் சிவசுப்ரமணியர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு ஹோம புனித நீர அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து வண்ண மலர் அலங்காரம் நடைபெற்று மஹாதீபாரதனையும் நடைபெற்றது அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கபட்டன இந்த சஷ்டி உற்சவத்தை அடுத்து சிறப்பான நிகழ்வாக சூரசம்ஹார நிகழ்ச்சியானது நடைபெறும்.
அனைத்து முருகர் கோவிலில் நடைபெறுவது போல் இங்கேயும் சூரசம்ஹாரம் நடைபெற்று அனைவருக்கதீய எண்ணங்கள் எல்லாம் ஒழிந்து அனைவரும் நல்ல குணங்களோடு இருக்க நமது முருகப்பெருமான் செய்த அந்த சூரசம்ஹாரத்தை கண்டு அனைவரும் இதை இன்புற்று தரிசனம் செய்ய வேண்டும்.
மேலும் முருகருக்கு திருக்கல்யாண உற்சவமானது மற்றும தெய்வானை திருக்கல்யாணம் வைபத்தில் கலந்துகொண்டு எல்லாம் வல்ல முருகப்பெருமானின் பேரருளை பெற்று நலங்களும் வளங்களும் பெறலாம் ஹோம நிகழ்ச்சியில் திரு நாகராஜ் மற்றும் சேகர் சுந்தரேச சாஸ்திரிகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர் மேலும் இந்நிகழ்ச்சியில் கடலூரில் உள்ள பிரபல தொழில் அதிபர் தம்பு என்று அழைக்கபடும் துரைராஜ் நாயுடு அவர்களும் வள்ளி விலாஸ் நகை கடை தொழிலதிபர் திரு.சங்கர் செட்டியார் மற்றும் அதிமுக முன்னாள் நகரமன்ற தலைவர் ck.சுப்ரமணியன் அவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.