கமலா ஹாரிஸ் நாளை மெக்ஸிகோ செல்கிறார்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆவணப்படுத்தப்படாத அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும், டெக்சாஸ் மாகாணம் எல் பசோ பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, மெக்ஸிகோ எல்லையை வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) பார்வையிட்டு கள நிலவரத்தை அறிய போவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்திருக்கிறார். அவர் துணை அதிபராக பதவியேற்ற பின்னர், மெக்ஸிகோ செல்வது இதுவே முதல் முறையாகும். வரும் 30ஆம் தேதி முன்னாள் அதிபர் டொனால்ட் டிரமப் மெக்ஸிகோ செல்வதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு பதலடி கொடுக்கும் பொருட்டு, கமலா ஹாரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

one × 2 =