அகதிகள் முகாமில் சிறுமிகளுடன் கலந்துரையாடிய கமலா ஹாரிஸ்!

அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஆதரவற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, அந்த அகதிகள் முகாமை நேரடியாக நேற்று பார்வையிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, நீங்கள் எப்படி அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரானீர்கள் உள்ளிட்ட கேள்விகளை சிறுமிகள் எழுப்பினர். இதற்கு கமலா ஹாரிஸ் அவருக்கு உண்டான தொனியில் பதிலளித்தது சிறுமிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Add your comment

Your email address will not be published.

ten + eight =