கோவை தெற்கு தொகுதியில் கமல் அதிர்ச்சி தோல்வி

 

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போராடி தோல்வியைத் தழுவினார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த கமல், மாலை நேரத்துக்குப் பிறகு பின்னடைவை சந்தித்தார். கமல்ஹாசனுக்கு மொத்தம் 51,087 வாக்குகள் கிடைத்து, இரண்டாம் இடம் பெற்றார். அவரது தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முதலிடம் பெற்ற வானதி சீனிவாசன், 52,526 வாக்குகள் பெற்று, 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ருசித்தார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ். ஜெயக்குமார் 41,669 வாக்குகளுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

Add your comment

Your email address will not be published.

ten − four =