ஜூனியர் லைப்கார்ட் விருது பெற்ற நாள்களை பசுமையுடன் நினைவுகூர்ந்த இளவரசி!

 

 

காமன்வெல்த் நாடுகளில் முதன்முறையாக ஜூனியர் லைப்கார்ட் விருதுபெற்ற இளவரசி இரண்டாம் எலிசபெத், 80 ஆண்டுகள் கழித்து அந்த நினைவுகளை பசுமையோடு அசைபோடுகிறார்.

 

மான்செஸ்டர் மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழக பிசியோதெரபி மாணவி சாரா டவுன்ஸ். 20 வயதான இவர், எக்ஸ்டரில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் கடந்த 2018ஆம் ஆண்டில் லைப்கார்டாக சேவையாற்றியபோது, நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வலிப்பு வந்து நீரில் மூழ்கியதை பார்த்து காப்பாற்றினார்.

இதற்காக வீர தீர சேவைகளுக்கான ரஸல் விருது சாராவுக்கு வழங்கப்பட்டது. அவருடன் இளவரசி காணொலி வாயிலாக அண்மையில் உரையாடினார். அப்போது, தனது 14 வயதில் இதேபோல் ஜூனியர் லைப்கார்ட் விருதுபெற்றதை நினைவுகூர்ந்து இளவரசி பேசியது:

நீண்ட நாள்களுக்கு முன்பாக நான் ஜூனியர் லைப்கார்ட் விருது பெற்றேன். அப்போது எனக்கு 12 முதல் 14 வயது இருக்கலாம். அது மிகப் பெரிய சாதனை. எனது நீச்சல் உடையுடன் விருதுபெற்ற பேட்ஜை அணிவது கௌரவமாக இருந்தது. என்னை பொறுத்தவரைக்கும் அவை மகத்தான நாள்கள்.

காமன்வெல்த் நாடுகளில் ஜூனியர் லைப்கார்ட் விருது பெறும் முதல் நபர் நான்தான் என்பது அப்போது எனக்கு தெரியாது. அதற்காக நான் கடினமாக பயிற்சி எடுத்தேன், பயந்தேன். அந்த விருது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்றார்.

Add your comment

Your email address will not be published.

4 × five =