இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கோரி பயிற்சி மருத்துவர்கள் கடந்த வாரம் நான்கு நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலும் மருத்துவ சேவையை பயிற்சி மருத்துவர்களே அதிக அளவில் செய்வதால் இந்த போராட்டம் நோயாளிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன்படி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தும் டாக்டர்கள் இல்லாததால் கவலையுடன் வீடு திரும்ப நேர்ந்தது.
இதில் ஆபரேஷன் செய்ய வந்தவர்களும் ஸ்கேன் பார்க்க வந்தவர்களும் அடங்குவர். இங்கிலாந்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தால் பாதிக்கப்படவில்லை என்பதும், இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.