ஜூடோ பயிற்சியில் 27 முறை வீழ்த்தப்பட்ட சிறுவன் கருணை கொலை

தைவான் நாட்டில் 7 வயது சிறுவன் ஒருவனுக்கு ஜூடோ எனும் தற்காப்புக் கலை பயிற்சி அளித்த பயிற்சியாளர், அவனை 27 முறை தரையில் அடித்து வீழ்த்தியதால், அவனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றான். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் 70 நாள்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த போதிலும், சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், பெற்றோர் சம்மதத்தின்பேரில், அவனுக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, சிறுவன் கருணைக் கொலை செய்யப்பட்டான். இதனிடையே, அவனது சாவுக்கு காரணமான பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Add your comment

Your email address will not be published.

nine + eleven =