பெண் நிருபர் மீது கோபப்பட்ட அமெரிக்க அதிபர்!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோபிடனும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து வெளியே வந்த ஜோபிடனிடம், சந்திப்பின் சாராம்சம் குறித்து சிஎன்என் பெண் நிருபர் கோலின்ஸ் கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதனால், பொறுமையிழந்த ஜோபிடன், உங்களுக்கு புரியவில்லை என்றால், நீங்கள் தவறான கேள்வியை கேட்கிறீர்கள் என்று அர்த்தம் என கடுமையாக பேசிவிட்டு சென்றார். . அதன்பின்னர், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவரை தேடிவந்து அதற்காக அவர் வருத்தமும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

three × 3 =