ரஷ்யாவுக்கு ஆயுதம் சப்ளை செய்ய வேண்டாம்

ரஷ்யாவுக்கு ஆயுதம் சப்ளை செய்ய வேண்டாம்

சீன அதிபரிடம் ஜோ பைடன் வேண்டுகோள்

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக சீனா மேற்கொண்டு ஆயுதங்களை சப்ளை செய்ய வேண்டாம் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வேண்டுகோள் விடுத்தார். இருவரும் தொலைபேசியில் நேற்று சிறிது நேரம் உரையாடிய போது இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்தார். இதனிடையே உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.