வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் ஜோ பிடன்

ஜார்ஜ் பிளாய்டின் சகோதரி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் மின்னிசொட்டா மாகாணத்தின் மினபொலீஸ் பகுதியில் கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தை சேர்ந்தவர், வெள்ளை இன காவலரால் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இதற்கு காரணமான டெரிக் சாவின் என்ற அந்தக் காவலருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸ் மறுசீரமைப்பு சட்டம் கொண்டுவரப்படும் என அதிபர் ஜோ பிடன் உறுதியளித்திருந்தார்.

அதிபர் தேர்தல் அறிக்கையில் கூட இந்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டு ஓராண்டுகள் கடந்தபோதிலும், இந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், அதிபருடன் ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சந்திப்பை, பிளாய்டின் சகோதரி பிரிட்ஜ் பிளாய்டு தவிர்த்தார். மாறாக, மினபொலீஸ் நகரில் நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்ற அவர், போலீஸ் மறுசீரமைப்பு சட்டத்தை கொண்டுவராமல், வாக்குறுதியை அதிபர் ஜோ பிட் தவறிய காரணத்தால், அவருடனான சந்திப்பை தவிர்த்ததாக தெரிவித்தார்.

அதேவேளையில், வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர்கள் சந்தித்து பேசினர். பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிபர், துணை அதிபர் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. ஒரு கழுகை கூட காப்பாற்ற உங்களால் கூட்டாட்சி சட்டமியற்ற முடியுமென்றால், நிற பேத அடிப்படையில் மக்களை காக்கவும் உங்களால் முடியும் என்றனர்.

Add your comment

Your email address will not be published.

3 × three =