பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்ததால் பதவியை இழந்த அமைச்சர்

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக் கோவிட் பரவல் காலகட்டத்தில் சமூக இடைவெளியை புறக்கணித்து தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதன் பின்னணியில், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மேத்யூ ஹான்காக் அனுப்பியுள்ளார். அதை கனத்த இதயத்துடன் பெற்றுக் கொள்வதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியை இழந்த மேத்யூ ஹான்காக்குக்கு ஏற்கனவே மார்த்தா என்ற மனைவி இருக்கிறார். அவர்களது 15 ஆண்டுகால இல்லற வாழ்க்கை விவாகரத்தின் மூலம் முடிவுக்கு வந்ததால், தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் அவர் நட்பில் இருந்ததும், அதுவே அவரது பதவிக்கு உலைவைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

three + thirteen =