ஜப்பானில் நிலச்சரிவு; 20 பேர் ஜீவசமாதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடமேற்கு திசையில் உள்ளது அடாமி நகரம். பள்ளமான இப்பகுதியில், இங்கு கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, அந்த நகரத்தின் ஒரு பகுதியை அப்படியே மண் மூடியது. இதனால், வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இதில் 20 பேர் வரை உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுமாறு ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா முடுக்கிவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

16 + eighteen =