இந்திய தலைப்பு செய்திகள்…

  • ஜம்மு காஷ்மீர் விமான படைதளத்தில் நடத்தப்பட்ட டிரோன் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் விமானப் படைவீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
  • புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன் குமார், என்.ஆர். காங்கிரசின் க. லட்சுமிநாராயணன், தேனீ சி. ஜெயக்குமார், சந்திரி பிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான இலாகா இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
  • தமிழத்தில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 2008 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவிட் பரிசோதனை என்ற பெயரில் இளைஞர் கொடுத்த விஷ மாத்திரையை உட்கொண்ட 2 பெண்கள் உயிரிழந்தனர்.
  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க தொடங்கின. மேலும் புதுச்சேரி எல்லையிலிருந்து இன்றுமுதல் சென்னைக்கு பேருந்துகள் இயங்குகின்றன.
  • பொதுமக்கள் அனைவரும் தயக்கமின்றி கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
  • மகாராஷ்டிரம், கேரள மாநிலங்களிலிருந்து கர்நாடகம் செல்பவர்களுக்கு கோவிட் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கான தடுப்பூசியை கண்டறிந்து செயல்படுத்தினால் தான் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும் என டெல்லி எய்ம்ஸ் தலைவர் ரண்தீப் குலேரியா தெரிவித்தார்.
  • கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பூஞ்சை தொற்று அச்சம் மற்றும் விலையின்மை காரணமாக விளைவித்த மாம்பழங்களை சாலையோரம் வியாபாரிகள் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

7 + 8 =