பிரான்சில் ஓரினச் சேர்க்கை தம்பதி கருவுறும் சிகிச்சை பெற அனுமதி

பிரான்சில் பெண்களை பெண்களே திருமணம் செய்து கொள்ளும் ஓரினச் சேர்க்கை தம்பதி, செயற்கையான முறையில் கருவுறும் சிகிச்சை பெற தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கையாளர்கள் குரல் எழுப்பி வந்தனர். மேலும், கருவுற நினைக்கும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள் இதற்காக மிகுந்த பொருட் செலவில் பெல்ஜியம் அல்லது ஸ்பெயின் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, கடந்த 2 ஆண்டுகளாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், ஓரினச் சேர்க்கை தம்பதி கருவுற அனுமதிக்கலாமா என விவாதம் நடைபெற்று வந்தது. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு கருவுற அனுமதியளிக்கும் 10ஆவது நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.

ஏற்கனவே பெல்ஜியம், ஸ்பெயின் தவிர டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும் இதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனை தவிர ஐஸ்லாந்து, நார்வேயிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் ஓரினச்சேர்க்கை தம்பதி செயற்கை முறையில் கருவுறும் சிகிச்சை பெற எந்தத் தடையும் கிடையாது.

Add your comment

Your email address will not be published.

13 + nine =