பிரிட்டன் பயணிகளுக்கு இத்தாலி கட்டுப்பாடு

பிரிட்டனிலிருந்து இத்தாலிக்கு செல்பவர்கள் 5 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு கட்டாயம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை அமலுக்கு வருகின்றன. அதேசமயம், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தனது நாட்டின் எல்லையை இத்தாலி விரிவாக திறந்துவைத்திருக்கிறது. மேலும் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாட்டினர் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை நீடிக்கும் என இத்தாலி சுகாதார அமைச்சர் ராபர்ட்டோ ஸ்பெரன்ஷா அறிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

eighteen − 5 =