இத்தாலியின் சிசிலி நகரின் கடலில் மர்ம பொருள் ஒன்று மூட்டை மூட்டையாக மிதந்து கொண்டிருந்தது. கடற்படை அதிகாரிகள் கப்பலில் அங்கு சென்று அந்த பொருட்களை வலை போட்டு மீட்டனர். அப்போது அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது, அதில் மூட்டை மூட்டையாக கோகைன் எனப்படும் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
மொத்தம் 2000 கிலோ அதாவது இரண்டு டன் கோகைன் சிக்கியது. அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் எடை அதிகமாக இருந்ததால், அந்த கோகைனை கடலில் போட்டுவிட்டு திரும்ப வரும்போது எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கோகைன் மதிப்பு சர்வதேச சந்தையில் 400 மில்லியன் பவுண்ட் என இத்தாலி போலீசார் தெரிவித்தனர்.
GIPHY App Key not set. Please check settings