இஸ்ரேலில் நெரிசலில் சிக்கி 44 பேர் பலி

 

இஸ்ரேலில் மத திருவிழாவில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதில் 38 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்நாட்டின் மேரோன் மலையடிவாத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்தத் துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை பேரிடர் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக தான் பிரார்த்திப்பதாக தெரிவித்தார். 12}க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. நெரிசலில் சிக்குண்டவர்களில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்புப் பணி தொடரும் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

nineteen + seven =