இஸ்ரேலின் லாட் நகரில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலின் மைய நகரமான லாட் நகரில், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று பிரதான மதத்தினரின் புனித பூமியாக ஜெருசலேம் விளங்குகிறது. இதற்கு 3 மதத்தினரிமே உரிமை கொண்டாடுவதால், இதற்கான உரிமைப் போராட்டம் இஸ்ரேலில் வலுக்கிறது. அந்தவகையில், இஸ்ரேலின் மையப்பகுதியாக திகழும் லாட் நகரில் அரேபிய முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பாலஸ்தீனியர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் வாகனங்கள் தீக்கிரையாகின. தந்தை, மகள் பலியாகினர்.

அதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸô நகரை குறிவைத்து இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால், இந்த பிராந்தியமே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது 40 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கூறுகிறது. ஜெருசலேம் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாகவே இஸ்ரேலும் வன்முறையில் இறங்கியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை குறிவைத்து கடந்த திங்கள்கிழமை முதல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதலை பாலஸ்தீனம் அரங்கேற்றியதாகவும் ராணுவம் கூறியது. அதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸôவில் உள்ள உயர்கோபுரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாலேயே அந்நாட்டின் தலைநகர் டெல் ஆவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குவதாக பாலஸ்தீன ராணுவம் விளக்கம் அளித்தது. இதுபோல 200க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது ஏவியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வன்முறையால் ரத்தக்கறை படிந்த இஸ்ரேலின் லாட் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நடைபெற்றுவரும் இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென ஐ.நா.வுக்கான மத்திய கிழக்கு தூதுவர் டோர் வென்னிஸ்லான்ட் வலியுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

2 + twenty =