லண்டனில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்கள் மீது முட்டை வீச்சு

 

 

லண்டனில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்கள் 5 பேர் மீது மர்ம நபர்கள் முட்டைகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

லண்டன் இல்போர்டு ஆல்பர்ட் ரோடு பகுதியில் உள்ள மசூதியில், ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தினமும் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்கள் 5 பேர் மீது மர்ம நபர்கள் முட்டையை எறிந்துவிட்டு தப்பினர்.

மசூதி வாயிலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இலிபோர்டு தெற்கு தொகுதி எம்பி சாம் டேர்ரி கூறுகையில், இதுபோன்ற வெறுப்புணர்வை விதைத்து, வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளுக்கு இலிபோர்டில் இடம் கிடையாது. தவறு இழைத்தவர்கள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றார்.

Add your comment

Your email address will not be published.

20 − 17 =