ஈராக்- சிரியா எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

ஈராக்- சிரியா எல்லையில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத நிலைகளை குறிவைத்து அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. அங்கு பயங்கரவாதத்துக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவிக்கவில்லை. அதேவேளையில், இதில் 5 பேர் வரை பலியாகி இருக்கலாம் என கண்காணிப்புக் குழு தெரிவித்தது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்த வான்வழித் தாக்குதலை அமெரிக்கா கையாண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Add your comment

Your email address will not be published.

one × 5 =