மே 17 முதல் சர்வதேச பயணங்களுக்கு அனுமதி

 

பிரிட்டனில் மே 17 முதல் சர்வதேச விமான பயணங்களுக்கு அனுமதியளிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கூடுதல் தகவல் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரிட்டனின் பயணத் தடைக்கான சிவப்பு பட்டியலில் இந்தியா இருப்பதால், இந்திய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என கூறப்படுகிறது.

அதேவேளையில், சர்வதேச விமானப் பயணங்களுக்கு அனுமதியளிக்கப்படும் பட்சத்தில், பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்த பிரதமர், ஒரு மீட்டருக்கு அதிகமான சமூக இடைவெளி நடைமுறை ஜூன் 21ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார். கூடுதல் தளர்வுகள் மீதான அறிவிப்புகளை விவரங்களின் அடிப்படையிலேயே தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக எம்.பி.க்களை சந்தித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தினார். அப்போது, விமான நிலையங்களைத் திறப்பதால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால், மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டுமென வலியுறுத்திய எம்பிக்கள், அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

ten − eight =