கரோனா தோற்றம் குறித்து புலன் விசாரணை

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உத்தரவு 

உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு சர்வதேச அளவில் இதுவரை 16 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியை முடக்கிய இந்த கரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திட்டமிட்டு பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில், வூஹானில் உள்ள இறைச்சிக் கூடத்திலிருந்து வெளவால் வாயிலாக கரோனா வைரஸ் பரவியதாகவும் கருதப்படுகிறது. எனவே இதன் உண்மைத்தன்மையை அறிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும், விசாரணை அறிக்கையை 90 நாள்களில் தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க முகமைக்கு ஜோ பிடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

one × two =