இஸ்லாமிய பெண்களின் பர்காவை தபால் பெட்டியுடன் ஒப்பிடுவதா?

 

பிரதமருக்கு விசாரணை குழு கண்டனம்

 

இஸ்லாமிய பெண்கள் பர்கா அணிவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த 2015இல் வெளியிட்ட கருத்து பொறுப்பற்றது என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் மேயர் தேர்தலையொட்டி, அப்போதைய கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான போரிஸ் ஜான்சன் ஆங்கில இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், தொழிலாளர் கட்சி வேட்பாளரின் மதத்தை மறைமுகமாக விமர்சித்து, கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, இஸ்லாமிய பெண்கள் பர்கா அணிவதை தபால் பெட்டிக்கு உவமையாக குறிப்பிட்ட அவர், பர்கா அணியும் இஸ்லாமிய பெண்கள் வங்கிக் கொள்ளையர்களை போல் தோற்றமளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

போரிஸ் ஜான்சனின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய பிரதமர் (டேவிட் கேமரூன்) உத்தரவிட்டார். அதன்படி, பேராசிரியர் ஸ்வரன் சிங் தலைமையில், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போது விசாரணை நிறைவடைந்த நிலையில், அதன் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. 44 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட அந்த அறிக்கையில், பர்கா அணியும் இஸ்லாமிய பெண்கள் குறித்து போரிஸ் ஜான்சன் தெரிவித்த கருத்து, இஸ்லாமிய சமுதாயத்தின் மீதான கன்சர்வேடிவ் கட்சியின் உணர்வற்ற தன்மையையும், பிரதமரின் பொறுப்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர், இன்றைய நாளில் ஒரு பிரதமராக ஆட்சேபத்துக்குரிய கருத்தை நான் தெரிவித்திருக்கின்றேனா?. மாட்டேன் என்று கூறினார். இந்த விவகாரத்தில் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

five × 2 =