வடக்கு அயர்லாந்தில் மதுபான விடுதி, ஹோட்டல்களின் உள்அரங்கில் பொழுதைக் கழிக்க அனுமதி

 

வடக்கு அயர்லாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், உணவகம், மதுபான விடுதி ஆகியவற்றில் உள்அரங்கில் வாடிக்கையாளர்கள் கூடி, இன்பமாக பொழுதைக் கழிக்கும் வண்ணம், திங்கள்கிழமை முதல் அனுமதியளிக்கப்படுகிறது. இதேபோல், வீடுகளிலும் இருகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கூடி மகிழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, பிரிட்டனின் பிற நாடுகளுக்கும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவும் தடையேதுமில்லை. இந்த நடவடிக்கைகளுக்கு அயர்லாந்து அமைச்சர்கள் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தனர். இன்றைய நிலவரப்படி, அயர்லாந்தின் பச்சைப் பட்டியலில் போர்ச்சுகல் உள்பட 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இங்கு சென்றுவரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. வரும் நாள்களில் அயர்லாந்தில் மேலும் சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

13 + six =