இந்தோனேஷியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை

தென்கிழக்கு ஆசியாவில் அதிகபட்சமாக இந்தோனேஷியாவில் தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை 20 லட்சத்து 30 ஆயிரம் பேர் அத்தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். 60 ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை பலியாக செலுத்தினர். இந்த நிலையில், அங்கு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இதுவரை 63 பேர் பலியாகியுள்ளனர். எனவே, மருத்துவ தர ஆக்சிஜனை துரிதமாக சப்ளை செய்யுமாறு ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தோனேஷிய அரசு அறிவுறுத்தியது.

Add your comment

Your email address will not be published.

four × 3 =