முடங்கியது இந்தோனேஷியா

சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற இந்தோனேஷியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அங்கு தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை அந்நாட்டில் 20 லட்சம் பேர்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், இந்தோனேஷியாவின் பிரதான தீவான ஜாவாவிலும், பாலி தீவிலும் ஊரடங்கு 2 வாரத்துக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் தினசரி பாதிப்பை 10 ஆயிரத்துக்கும் கீழ் கொண்டு வருவதே தங்கள் முதன்மை இலக்கு என்றார் அதிபர் ஜோகோ விடோடோ.

Add your comment

Your email address will not be published.

20 − four =