திடீரென அதிகரிக்கும் இந்தியவகை கரோனா பாதிப்பு

 

இங்கிலாந்தின் டியூஸ்பரி பகுதியில் சவீல் டவுன் மற்றும் தோர்ன்ஹில் லீஸ் பகுதியில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 21ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ஒரு லட்சம் பேரில் 107 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. இது இதற்கு முந்தைய வார எண்ணிக்கையை விட 51% அதிகம். எனவே, 11 வயதுக்கு மேற்பட்டோர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்றும், வயதுவந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. இதுதவிர இங்கு கூடுதலாக பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Add your comment

Your email address will not be published.

16 − 6 =