இந்தியவகை கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கலாம்

 

வேல்ஸ் அரசின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

 

வேல்ஸ் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை 28 பேருக்கு இந்தியவகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 57 ஆக திடீரென அதிகரித்தது. இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த வேல்ஸ் மாகாண அரசின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிராங்க் ஆதர்டன், வேல்சில் இந்திய வகை கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கலாம். இதைக் குறித்த கவலையும், விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

மாகாணத்தின் கார்டிப், கிளமோர்கனின் வேல் ஆகிய பகுதிகளில் அதிகளவில் இந்தியவகை கரோனா தொற்று பரவுகிறது. எனவே, பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக பேணி, முகக் கவசம் அணிவதை நிறுத்தக் கூடாது என்றார்.

இதேபோல், விடுமுறை நாள்களில் வெளியில் எங்கும் திரியாமல், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டுமென வேல்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் எலுண்டன் மோர்கன் கேட்டுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

1 + 4 =