பிரிட்டனில் இந்திய வகை கரோனா 5 நாள்களில் 77% உயர்வு

 

பிரிட்டனில் இந்திய வகை கரோனா 5 நாள்களில் 77 சதவீதம் உயர்ந்திருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்தார்.

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொதுமக்கள் மறுபடியும் கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், இந்திய வகை கரோனா அனைவருக்கும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. இதன் காரணமாக சமூக இடைவெளி விதிமுறைகளை தளர்த்துவதற்கான தேதி தள்ளிவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி ஜூன் 21இல் அரசு வெளியிடவுள்ள அடுத்தகட்ட தளர்வுகளிலும், இந்தியவகை கரோனா தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பாராளுமன்றத்தின் பொது அவையில், இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக், போல்டன், பிளாக்பன் மட்டுமன்றி, பிற பகுதிகளிலும் இந்தியவகை கரோனாவின் தாக்கம் உணரப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் 77 சதவீதம் அதிகரித்து, இதுவரை வயது வித்தியாசமின்றி 2323 பேரை இந்தியவகை கரோனா பாதித்துள்ளது. மருத்துவமனைகளில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியை ஏற்க மறுக்கின்றனர். போல்டனில் நிகழ்வதை பார்த்து, தடுப்பூசியை பெற்றுக் கொள்ள அவர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

19 − 9 =