இந்திய மாநில செய்திகள்

காராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பிவாண்டியில் இருவேறு கும்பல் வன்முறை சம்பவங்களில் தனியார் மின்சார பாதுகாவலர் உயிரிழந்தார். போலீசார் மூவர் காயமடைந்தனர்.

கேரளத்தில் உறவினர்கள் இடையே முகநூலில் போலி கணக்கு தொடங்கி நடைபெற்ற பரிகாச விளையாட்டு, பிறந்து சில மணி நேரமே ஆன சிசு உள்பட மூன்று உயிர்கள் பறிபோக காரணமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கர்நாடகத்தில் 80 சதவீத மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது சாத்தியம் தானா என்பதை எடியூரப்பா அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் மசோதாவை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதல் சம்பவங்களில் 17,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ‘ஹைபிரிட் பயங்கரவாதிகள்’ அல்லது ‘பகுதி நேர பயங்கரவாதிகள்’ என்ற புதிய சவாலை பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புப் படையினரின் பட்டியலில் இடம்பெறாத இவர்கள், முழுநேர பயங்கரவாதிகள் அல்லர்; தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு மீது தாக்குதல் நடத்திவிட்டு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர்.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இருவர் மீது நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் 12 என்கவுண்டர்களை நடத்தி பலரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளது அரசியல்ரீதியாக கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

five × four =