இந்திய முக்கிய செய்திகள்

* காவிரி குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை மலர்தூவி திறந்துவைத்தார். ஜனவரி 28ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் வரை சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படும். இதனால், குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

* கருப்பு பூஞ்சை மருந்துக்கான ஆம்போடெரிசின் பி, கரோனாவை எதிர்கொள்ளும் டோசிலிஜூமாப் ஆகிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெறும் திட்டம் 100 நாள்களில் நிறைவுபெறும் என்றார் இந்துசமய அறநிலையத்துறை அûச்சர் பி.கே. சேகர் பாபு.

* கோவிட் தொற்றால் பலியான அரசு ஊழியர்களின் வாரிசுகள் சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்றவர்கள் இந்த உதவியை பெறுவதற்கான வயது வரம்பு 18க்கு கீழே இருக்க வேண்டும்.

* பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புவதாக ஐ.நா.வில் இந்தியா தெரிவித்தது.

* இந்தியாவில் ரூ.13,500 வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய மெஹுல் சோக்ஸிக்கு ஜாமீன் அளிக்க டொமினிகா நாட்டு உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

* இந்தியாவிலேயே முதன்முறையாக ராஜஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.5க்கு சனிக்கிழமை விற்பனையானது. பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியது.

* கோவிட் பாதிப்பை குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மேட்டூர் அணையை திறந்தவைத்த பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

* இந்தியாவன் ஆர்வமிகு மாவட்ட மேம்பாட்டு திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

* இந்தியாவில் நடைபெர்ற போர்களின் வரலாற்று விவரங்களையும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு விவரங்களையும் சேகரித்து தொகுப்பாக வெளியிடும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

* கோவிட் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்கிசைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

* உலக சுகாதார அமைப்பின்கீழ் செயல்படும் உலகளாவிய காற்று மாசு மற்றும் ஆரோக்கியத்துக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கௌரவ உறுப்பினராக இந்தியாவின் கான்பூர் ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் எம்கே3 இந்திய கடலோர காவல் படையின் சனிக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.

* அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

thirteen + eleven =