இந்திய செய்திகள் சில வரிகளில்…

  • த்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பாஜக மூத்த தலைவர்கள் ஜே.பி. நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
  • த்தர பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் அயோத்தி நகரம், நாட்டின் பாரம்பரியத்தையும், வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
  • டெல்லி எல்லையில் கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அதை நிறைவு செய்ய வேண்டுமென மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கேட்டுக் கொண்டார்.
  • ம்மு காஷ்மீரில் அவநம்பிக்கையே நிலவுகிறது. அதை மத்திய அரசு களைய வேண்டுமென தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
  • போதைப்பொருள் இல்லாத தேசமாக இந்தியா உருவாக வேண்டும் என்ற கனவை அனைவரும் நனவாக்க வேண்டுமென பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
  • ந்தியாவில் இதுவரை 31.50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
  • தெற்கு தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து கோவா நோக்கிச் சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சுரங்கப் பாதையில் நேற்று அதிகாலை சென்றபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
  • ந்தியாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்களான ஷியாம் விஸ்வநாதன் பிள்ளை, ஜஸ்னா ஜமால் ஆகிய இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியது.

Add your comment

Your email address will not be published.

15 − four =