இந்திய முக்கிய செய்திகள்…

ந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா- பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் விரைவில் ஈடுபடுகின்றன. இதில், பிரிட்டனின் மிகப்பெரிய கப்பலான எச்.எம்.எஸ். குயின் எலிசபெத் பங்கேற்கிறது.

இந்திய பொருளாதாரம் 2023ஆம் நிதியாண்டிலிருந்து வேகமெடுக்கும் என்றார் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்.

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு அனுமதி பெறுவது அவசியம் என தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், செய்தி சேகரிக்க சென்ற இந்திய புகைப்பட கலைஞர் தானிஷ் சித்திக்கி பலியானார்.

விஜய் மல்லையாவின் சொத்துகள் சிலவற்றை விற்பனை செய்ததன் மூலம் ரூ.792.11 கோடி கிடைத்ததாக அமலாக்க துறை தெரிவித்தது. அவர் 9 ஆயிரம் கோடி வங்கிகளில் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு முழு உரிமை இருப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த பிறகு இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார்.

பாஜகவை எதிர்க்க பயப்படும் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Add your comment

Your email address will not be published.

nine − 9 =