இந்திய முக்கிய செய்திகள்..

 

தமிழகத்தில் 3ஆம் அலையை சமாளிக்க முதல்கட்டமாக ரூ.800 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெல்லியில் சந்தித்து பேசினார்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் போன்ற தலைவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேச துரோக சட்டத்தை நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீக்காதது ஏன் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்தியாவில் வாட்ஸ் ஆப்பில் அவதூறு தகவல்களை பரப்பியதாக ஒரே மாதத்தில் 20 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் தகுதியை இந்தியா விரைவில் நிரூபிக்கும் என மத்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

5 × two =