இந்திய முக்கிய செய்திகள்…

* பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பயணிக்கிறார். அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்கிறார்.

* கோவிட் தொற்று குறைந்த சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் உள்ளூர் அளவில் இயக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

* கருப்பு பூஞ்சை மருந்து, கோவிட் மருந்து உள்ளிட்ட மருந்து பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு அரசாணையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

* பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஆராய டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரிவித்தார்.

* தமிழ்நாட்டில் வேளாண்மை, குடிநீர், மருத்துவம் உள்பட 7 இலக்குகளில் தன்னிறைவை எட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

* எத்தனால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடப்பாண்டில் 78,000 டன் அரிசியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

* கோவேக்ஷின் தடுப்பூசியின் ஒரு டோசை மத்திய அரசுக்கு ரூ.150க்கு நீண்ட நாள்களுக்கு அளிக்க இயலாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது.

* தமிழகத்தில் கோவிட் 3ஆம் அலையை எதிர்கொள்ள 7000 படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

* கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உயரத்தை அதிகரிக்க வேண்டும். அதை உணர்த்தவே தீ விபத்து ஏற்பட்டதாக தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது.

* தமிழ்நாட்டில் பொதுமுடக்கத்தின் பலனா கடந்த 15 நாள்களில் கோவிட் பாதிப்பு 55 சதவீதம் குறைந்தது.

* புதுக்கோட்டையில் கோவிட் நோயாளிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் நோயாளிகள் விரைந்து குணமடைய சுயவர்ம சிகிச்சை பேருதவி புரிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* மேட்டூர் அணையை தொடர்ந்து கல்லணையும் இன்று திறந்துவைக்கப்படுகிறது.

* கிழக்கு லடாக்கின் கல்வானில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் பலியான 20 ராணுவ வீரர்களுக்கு நேற்று ராணுவம் அஞ்சலி செலுத்தியது.

* இந்தியா, சீனா எல்லையில் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில், படைகளற்ற பகுதிகளை உருவாக்க வேண்டுமென சீன ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஜூபோ யோசனை தெரிவித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

3 × two =