இந்திய முக்கிய செய்திகள்

* பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர். அப்போது மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

* பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். அவரை மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி வரவேற்றார்.

* கரோனா தொற்றால் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்குவது குறித்து பரீசிலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* தமிழகத்துக்கு கூடுதலாக 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. அதை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தமிழக அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

* காவிரியிலிருந்து தமிழகத்துக்கான மாதாந்திர பங்கீட்டு நீரை உறுதிசெய்யக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

* நிலம் பாலைவனமாதல் மீது ஐ.நா.வில் திங்கள்கிழமை நடைபெறும் மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

* பொதுமுடக்கத்தின் பயனாக தமிழகத்தில் கடந்த 10 நாள்களில் கரோனா பாதிப்பு 41 சதவீதம் குறைந்திருக்கிறது.

* சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.37,080க்கு விற்பனையானது.

* அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பயன்பாடில்லாத பழைய வாகனங்களை ஏலம்விட்டு அந்தத் தொகையை அரச கருவூலத்தில் செலுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் வெ. இறையன்பு அறிவுறுத்தினார்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* கரோனா தொற்று பரவலை கண்டறிவதற்காக நாடு முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் ஆய்வை இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் இந்த மாதமே தொடங்கவுள்ளதாக நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பவுல் தெரிவித்தார்.

* வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் பயன்பெறற மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும், ஆந்திர பிரதேசமும் முன்னிலை வகிப்பதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

11 + 11 =