இந்திய முக்கிய செய்திகள்…

* கரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீக்குமாறு உலக வர்த்தக அமைப்பிடம் விடுத்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு ஜி7 நாடுகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

* பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.499 கோடி செலவிடுவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

* முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும்போது பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர்களை பயன்படுத்த வேண்டாம் என தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டார்.

* கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில், இலங்கை கடற்படையினர் துருப்பிடித்த பழைய பேருந்துகளை கடலுக்குள் போட்டு தடுப்பு ஏற்படுத்தி வருவதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

* சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. சோதனையில், அது புரளி என்பது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

* இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,834 ஆக சரிந்தது. தொடர்ந்து 6ஆவது நாளாக தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் பதிவானது.

* இந்தியாவில் கடந்த 2020}21 நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

* டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 32 கிரவுண்ட் நிலம் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் நேற்று மீட்கப்பட்டது.

* தமிழகத்தில் ஒரே நாளில் 54 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை உள்பட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* அமெரிக்காவில் கல்வி பயிலவுள்ள இந்திய மாணவர்களின் முறையான பயணத்தை உறுதிசெய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

* மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்துவரும் பாகிஸ்தான் நாட்டின் ஹிந்து சிந்து சமூகத்தை சேர்ந்த 5 ஆயிரம் அகதிகளுக்கு கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது.

* இந்தியாவில் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுவதால், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டுமென மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்களுக்கான விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

* சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

* தேசிய அரசியலில் பாஜகவுக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்த வேண்டுமெனில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைப்பு அவசியம் என மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தினார். ஏற்கெனவே கடந்த ஆண்டு காங்கிரசில் அமைப்பு மாற்றம் கோரி கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர் ஆவார்.

* ஜம்மு காஷ்மீரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படவுள்ள வெங்கேஸ்வர சுவாமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

twenty − thirteen =