இந்திய செய்திகள் சில வரிகளில்…

* பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து துபாய்க்கு நேற்று சென்ற விமானத்தில் எஸ்.பி. சிங் ஓபராய் என்ற ஒரு பயணி மட்டுமே பயணித்தார்.

* இந்தியாவில் இதுவரை 48 பேருக்கு டெல்டா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

* அருணாசல பிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடிவரும் சீனா, அதன் எல்லையை ஒட்டி, மலைப்பகுதியில் முதல்முறையாக மின்சாரத்தில் இயங்கும் புல்லட் ரயிலை அறிமுகம் செய்திருக்கிறது.

* மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே பனிப்போர் நீடித்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நேற்று ஒரு மணிநேரத்துக்கு முடக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

* இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்றுவந்த இந்திய- அமெரிக்க கூட்டு பயிற்சி கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்தது.

* கோவிட் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவுக்கு ஜப்பான் ரூ.7 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்தது.

* இந்தியாவில் இதுவரை 30 கோடியே 79 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தியதில் உத்தர பிரதேசம் முதலிடமும், தமிழ்நாடு 3ஆம் இடமும் பிடித்திருக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

3 × two =